2009-10-21 16:35:34

வியட்நாமின் மத்திய பகுதியில் கடந்த ஆண்டில் முப்பதாயிரம் பேர் திருமுழுக்கு பெற்றனர்


அக்.21,2009 வியட்நாமின் மத்திய பகுதியில் கடந்த ஆண்டில் முப்பதாயிரம் பேர் திருமுழுக்கு பெற்றனர், மேலும் இருபதாயிரம் பேர் கத்தோலிக்கராக மாறுவதற்குத் தயாரித்து வந்தனர் என்று அந்நாட்டு கோன்டும் ஆயர் மைக்கிள் ஹோவாங் டுக் ஒனா அறிவித்தார்.

கடந்த ஞாயிறன்று கடைபிடிக்கப்பட்ட உலக மறைபரப்பு தினத்தை முன்னிட்டு இதனை ஆசிய செய்தி நிறுவனத்திடம் வெளியிட்டார் ஆயர் மைக்கிள்.

1926ம் ஆண்டில் திருத்தந்தை 11ம் பத்திநாதர், அனைத்துத் திருச்சபைகளையும் மறைபோதக நடவடிக்கைகளை ஊக்குவிக்க அழைப்பு விடுத்தத்தைத் தொடர்ந்து வியட்நாம் தலத்திருச்சபை இதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன.

தற்சமயம் வியட்நாம் தலத்திருச்சபை அந்நாட்டின் 350 ஆண்டுகளுக்கு மேற்பட்ட மறைப்பணியையும் ஆயர் பேரவை உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டையும் சிறப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



 








All the contents on this site are copyrighted ©.