2009-10-21 16:32:42

சூடானில் 2005ம் ஆண்டின் புரிந்துணர்வு அமைதி ஒப்பந்தம் முழுமையாய்ச் செயல்படுத்தப்பட கிறிஸ்தவ சபைகள் வலியுறுத்தல்


அக்.21,2009 சூடான் நாட்டில் 2005ம் ஆண்டின் புரிந்துணர்வு அமைதி ஒப்பந்தம் முழுமையாய்ச் செயல்படுத்தப்படுமாறு அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகள் அரசை வலியுறுத்தியுள்ளன.

சூடானின் Juba கத்தோலிக்கத் திருச்சபை ஆயர் Loro Luku உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், இந்த ஒப்பந்தம் முழஉமையாகவும் நேர்மையாகவும் அமல்படுத்தப்பட்டால், மிகவும் கவர்ந்திழுக்கவல்ல, அமைதியும் ஐக்கியமும் கலந்த சூழல் உருவாகும் என்று கூறியுள்ளனர்.

தென் சூடானிலுள்ள மக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படுவோர் இறைவனின் நீதித் தீர்ப்பின்முன் அமர வேண்டுமென்றும் அத்தலைவர்களின் அறிக்கை எச்சரித்துள்ளது.

இவ்வொப்பந்தத்தின்படி 2005ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி முதல் 2011ம் ஆண்டு ஜூலை 8ம் தேதி வரையிலான இடைக்கால அரசு, அனைத்து குடிமக்களுக்கும் அரசியல், சட்ட, பொருளாதார மற்றும் சமய ரீதியான சம உரிமைகள் வழங்க வேண்டும்.

சூடானில் 1983ம் ஆண்டு முதல் நடை பெற்று வரும் உள்நாட்டுப் போரில் 40 இலட்சத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் 20 இலட்சம் பேர் இறந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.