2009-10-21 16:36:34

ஊடகத் துறைகளில் வேலை செய்வோர் சிறாரின் உரிமைகளை மதிக்க வேண்டும், சிக்னிஸ் தலைவர் வலியுறுத்தல்


அக்.21,2009 ஊடகத் துறைகளில் வேலை செய்வோர் சிறாரின் உரிமைகளை மதிக்க வேண்டும் மற்றும் அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதற்கு உறுதிவழங்க வேண்டுமென்று சிக்னிஸ் என்ற உலக கத்தோலிக்க சமூகத் தொடர்பு கழகத் தலைவர் அகுஸ்தீன் லூர்துசாமி வலியுறுத்தினார்.

தாய்லாந்தின் சியாங் மாய் நகரில் இப்புதனன்று நிறைவு பெற்ற உலக சிக்னிஸ் மாநாட்டில் உரையாற்றிய லூர்துசாமி, சிறுவர்களால், சிறாருக்காக, குரலற்றவர்களின் குரல்களாகக் கத்தோலிக்க சமூகத் தொடர்பு சாதனங்கள் எப்பொழுதும் செயல்பட வேண்டுமென்று மேலும் வலியுறுத்தினார்.

எழுபது நாடுகளின் ஏறத்தாழ 660 பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த உலக மாநாடு, “ஊடகத்துறை அமைதியின் கலாச்சாரம்:நாளைய நம்பிக்கைகளாகிய சிறாரின் உரிமைகள் “ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 100 சிறாரும் பங்கு கொண்டனர்.

 








All the contents on this site are copyrighted ©.