2009-10-20 16:05:51

பூர்வீக மக்களின் மனித உரிமைகள் மதிக்கப்பட திருப்பீட அதிகாரி அழைப்பு


அக்.20,2009 பழங்குடி மக்களுக்கேயுரிய உயரிய மாண்பு குறித்து அவர்களுக்குக் கற்பிப்பதன்வழி பூர்வீக மக்களின் மீதான மனித உரிமை மீறல்களைத் தடுக்க ஐ.நா.அமைப்பு உதவ வேண்டுமென திருப்பீட அதிகாரி ஒருவர் அழைப்பு விடுத்தார்.

ஐ.நா.பொது அவையின் 64வது அமர்வில உரையாற்றிய ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் செலஸ்தீனோ மிலியோரே, உலகின் 37 கோடி பூர்வீகக் குடிமக்களின் தனித்தன்மை மற்றும் கலாச்சாரம் மதிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

பூர்வீக குடிமக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்வதாகக் குற்றம் சாட்டிய பேராயர் மிலியோரே, பழங்குடி மக்கள் தங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கென எடுக்கும் அனைத்து முயற்சிகளும் மதிக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

கலாச்சாரங்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றங்கள் ஒருவர் மற்றவரை மதிப்பதன் மூலம் இடம் பெற வேண்டுமேயொழிய ஒருவர் மற்றவரை அடிமைப்படுத்துவதன் மூலம் அல்ல என்பதையும் ஐ.நா.பொது அவைக் கூட்டத்தில் பேராயர் மிலியோரே பேசினார்.








All the contents on this site are copyrighted ©.