2009-10-17 17:51:46

கத்தோலிக்கரது விசுவாசத்தை உயிரோட்டம் பெறச் செய்வதற்கு உதவுவதாகத் திருச்சபையின் மறைப்பணி அமைய வேண்டும், பூனே ஆயர்


அக்.17,2009 முதல் இந்திய மறைபோதக மாநாட்டில் உரையாற்றிய பூனே ஆயர் தாமஸ் தாப்ரே, கத்தோலிக்கர் தங்களது தனித்துவத்தின் ஓர் அங்கமாக, தங்களது விசுவாசத்தை உயிரோட்டம் பெறச் செய்வதற்கு உதவுவதாகத் திருச்சபையின் மறைப்பணி அமைய வேண்டுமென்று கூறினார்.

கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்திற்கு உருக்கொடுத்து, அதை வாழ்வாக்கும் பொழுது, வஞ்சகமான வழிகளிலும் மோசடி சக்திகளாலும் தவறாகக் குற்றம் சாட்டப்படுகின்ற மதமாற்றம் குறித்த விவகாரம் வெறுமையாகிப் போய்விடும் என்றும் ஆயர் தாப்ரே கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் புரிந்துகொள்ளாமை மற்றும் முற்சார்பு எண்ணங்களால் ஏற்படுகின்றன என்றுரைத்த ஆயர், கடந்த ஆண்டு ஒரிசாவில் இடம் பெற்ற கிறிஸ்தவர்க்கெதிரான தாக்குதல்கல் பற்றியும் பேசினார்.

கத்தோலிக்கர், கிறிஸ்துவில் முழுமையாய் வாழும் பொழுது மட்டுமே, அவர்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாகவும் அவரின் நற்செயதியாகவும் ஸ்திரமாக மாறமுடியும் என்பதை வலியுறுத்திப் பேசினார் பூனே ஆயர் தாப்ரே.








All the contents on this site are copyrighted ©.