2009-10-16 17:09:41

வறுமையில் வாடும் சிறார் மீதும் குடும்பங்கள் மீதும் கரிசனை காட்டப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் அழைப்பு


அக்16,2009 சிறார் குறித்த சர்வதேச ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதில் அக்கறை, மற்றும் வறுமையில் வாடும் சிறார் மீதும் குடும்பங்கள் மீதும் கரிசனை காட்டப்படுமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

“வறுமைக்கெதிராகச் சிறாரும் குடும்பங்களும் குரல் கொடுக்கின்றன” என்ற தலைப்பில், அக்டோபர் 17, இச்சனிக்கிழமை, வறுமையை அகற்றுவதற்கான உலக தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன் இவ்வாறு கூறினார்.

எந்தவொரு பணவீக்கத்திலும் முதலில் மிகவும் பாதிக்கப்படுவது ஏழைகளே என்று கூறும் அச்செய்தி, அண்மை கணக்கெடுப்பின்படி, உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் இவ்வாண்டில் குறைந்தது ஐந்து கோடிப்பேர் வேலை இழந்துள்ளனர், பத்து கோடிக்கு மேற்பட்டோர் வறுமைக் கோட்டிற்குக்கீழ் தள்ளப்படும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்றும் அறிவித்தது.

உலகில் வளங்கள் அதிகமாக இருந்த போதிலும், இலட்சக்கணக்கான சிறார்க்கு, குறிப்பாகச் சிறுமிகளுக்குப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படுகிறது என்றும் அச்செய்தி கவலை தெரிவிக்கிறது.

 








All the contents on this site are copyrighted ©.