2009-10-16 17:08:48

உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் உறுதியும் நீதியும் கொண்ட சர்வதேச சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டியு அவசியம், பேராயர் மிலியோரே


அக்16,2009 சர்வதேச சட்டங்கள் பற்றி நடைபெற்ற ஐ.நா.பொது அவையின் 64வது கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் மிலியோரே, சர்வதேச அளவில், குறிப்பாக உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் உறுதியும் நீதியும் கொண்ட சர்வதேச சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

உலகில் பலர், சர்வதேச சட்டங்களின் பாதுகாப்பு மற்றும் சலுகைகளிலிருந்து ஏதாவது ஒருவிதத்தில் ஒதுக்கப்படுகின்றனர் என்றுரைத்த பேராயர், பரவலாக இடம் பெறும் ஊழல், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான மோதல்கள், பயங்கரவாதம், போரின் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் பாலியல் பலாத்காரம் இன்னும்பிற மனித உரிமை மீறல்கள் நீதியான சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதற்குச் சாட்சிகளாக இருக்கின்றன என்று விளக்கினார்.

அமைதி, பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் சீர்கேடு போன்ற துறைகளில் சர்வதேச சட்டங்கள் கடைபிடிக்கப்படுவது மிகவும் இன்றியமையாதது என்றும் பேராயர் மிலியோரே கூறினார்.

மேலும், உலகின் மிகப்பெரிய வளங்கள் மக்கள் என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.