2009-10-16 17:04:25

உக்ரேய்ன் நாட்டு பிரதமர், மோனக்கோ தலைவர் ஆகியோர் திருத்தந்தையைச் சந்தித்தனர்


அக்16,2009 உக்ரேய்ன் நாட்டு பிரதமர் யூலியா வ்விளாடுமிரோவ்னா டிமோஷென்கோ மற்றும் சிறிய நாடான மோனக்கோ தலைவர் இளவரசர் இரண்டாம் ஆல்பிரட்டை வத்திக்கானில் இவ்வெள்ளியன்று திருத்தந்தை சந்தித்தார்.

இச்சந்திப்பில் தங்களது உக்ரேய்ன் நாடு, ஐரோப்பிய சமுதாய அவையில் இணைவதற்குத் திருத்தந்தை உதவுமாறு கேட்டதாக உக்ரேய்ன் பிரதமர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட வெளியுறவுத்துறைச் செயலர் பேராயர் தொமினிக் மாம்பெர்த்தி ஆகியோரையும் இவர்கள் சந்தித்தனர்.

மக்களின் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், இயற்கை வளங்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல், இளையோரை உருவாக்குதல், மனித வாழ்வு எல்லா நிலைகளிலும் பாதுகாக்கப்படல் போன்ற சர்வதேச விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் இடம் பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் அறிவித்தது







All the contents on this site are copyrighted ©.