2009-10-15 16:56:50

மத்திய பிரதேச அரசின் நடவடிக்கை கவலை தருகிறது - கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகள்.  


அக். 15, 2009. திருச்சபையின் சொத்துக்கள் குறித்த விவரங்களை வெளியிடுமாறு அரசாணைப் பிறப்பித்துள்ள மத்திய பிரதேச அரசின் நடவடிக்கை கவலை தருவதாக அம்மாநில கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலக் கல்வித்துறை அண்மையில் பிறப்பித்துள்ள இந்த ஆணையின்படி, அக்டோபர் 16 க்குள் இத்தகவல்கள் அரசை சென்று அடைய வேண்டுமெனவும், இதை எதிர்த்து நீதி மன்றத்தின் வழியாக மேல் முறையீடு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் ஜாபுவா மறைமாவட்ட ஆயர் தேவப்ரசாத் கனவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது போன்ற ஆணை, திருச்சபைக்குத் தடங்கல் ஏற்படுத்தும் ஒரு முயற்சி எனவும் திருச்சபையின் கோவில்கள், கல்லறைகள் குறித்தத் தகவல்களைக் கல்வித்துறை ஏன் கேட்க வேண்டும் எனவும் கூறினார் போபால் உயர் மறைமாவட்ட பேராயர் லியோ கொர்நேலியோ.
புதுவிதமான இந்த ஆணை, கிறிஸ்தவத்தை இன்னும் அடக்குவதற்கு அரசு மேற்கொள்ளும் முயற்சியாகத் தெரிகிறது எனப் பேராயர் கொர்நேலியோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.