2009-10-15 16:57:10

புதிதாக உருவாக்கப்பட்டு வரும் வேலைகள், மக்கள் தன்னிறைவு பெற்றவர்களாக மாறுவதற்கு உதவ வேண்டும், அமெரிக்கப் பல்சமய குழுக்கள்


அக்15,2009 உலக அளவில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி மெதுமெதுவாக குறைந்துவரும் வேளை, புதிதாக உருவாக்கப்பட்டு வரும் வேலைகள், மக்கள் தன்னிறைவு பெற்றவர்களாக மாறுவதற்கு உதவ வேண்டும் என பல்சமய குழுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

“ஏழ்மைக்கெதிரான போராட்டம்” என்ற தலைப்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டு பல்சமயத் தலைவர்கள் நடத்திவரும் தேசிய கருத்தரங்கில், அந்நாட்டு கொள்கை அமைப்பாளர்களுக்கு இந்த வேண்டுகோளை முன்வைத்தனர்.

அமெரிக்காவின் புதிய பொருளாதாரத்தை வளர்த்து வடிவமைப்பதில் விசுவாசக் குழுக்களுக்கு இருக்கும் பொறுப்பைச் சுட்டிக்காட்டிய அத்தலைவர்கள், நாட்டின் புதிய பொருளாதாரக் கொள்கைகள், மக்கள் அரசின் சலுகைகளைச் சார்ந்து இருக்காதவாறு அமைக்கப்பட வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த செப்டம்பரில் வேலைவாய்ப்பின்மை 9.8 விழுக்காடாக இருந்தது. இதே மாதத்தில் வறுமையில் வாழ்வோரின் எண்ணிக்கையும் 3 கோடியே 73 இலட்சத்திலிருந்து 3 கோடியே 98 இலட்சமாக உயர்ந்தது. இந்நிலை, கடந்த 26 வருடங்களில் இல்லாத அளவுக்கு அதிகம் என்று அந்நாட்டு புள்ளிவிபர அலுவலகம் அறிவித்தது.







All the contents on this site are copyrighted ©.