2009-10-15 16:58:32

ஏழை நாடுகளில் வயிற்றுப்போக்கால் இறக்கும் சிறாரின் வாழ்வைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும், ஐ.நா.நிறுவனங்கள்


அக்15,2009 வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் சம்பந்தப்பட்ட வியாதிகளால் ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 15 இலட்சம் சிறார் இறக்கின்றனர் என்று யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல நிதி அமைப்பு அறிவித்தது.

அக்டோபர் 15, இவ்வியாழனன்று உலக கைகழுவல் தினம் கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட இவ்வமைப்பு, சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைக் கழுவததன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது.

சிறாரின் இறப்புக்கு இரண்டாவது காரணமாக இருக்கின்ற வயிற்றுப்போக்கால் ஆண்டு தோறும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 15 இலட்சம் சிறார் இறக்கின்றனர் என்று இந்த அமைப்பின் இயக்குனர் ஆன் வெனெமான் (Ann Veneman) கூறினார்.

வயிற்றுப்போக்கு வியாதிக்கான சிகிச்சைக்கான செலவு அதிகமில்லையெனினும் வளரும் நாடுகளில் 39 விழுக்காட்டுச் சிறார் மட்டுமே இதற்கான சிகிச்சை பெறுகின்றனர் என்றும் வெனெமான் தெரிவித்தார்.

மேலும், யூனிசெப் மற்றும் உலக நலவாழ்வு நிறுவனங்கள், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஏழு திட்டங்களையும் பரிந்துரைத்துள்ளன.

உலகில் இடம் பெறும் வயிற்றுப்போக்கு வியாதிக்கு 90 விழுக்காடு காரணம், சுத்தமற்ற நீர், சுகாதார வசதியின்மை, அசுத்தம் போன்றவையாகும்.

கைகளைச் சோப்பு மற்றும் தண்ணீரால் மூச்சுத்திணறல் சம்பந்தப்பட்ட வியாதிகளால் இடம் பெறும் இறப்புகளில் ஏறக்குறைய 23 விழுக்காடுக் குறைக்க முடியும் என்றும் யூனிசெப் கூறியது.
உலகில் 2006ம் ஆண்டில் 250 கோடிப்பேர் சுத்தமற்ற நலவாழ்வு வசதிகளைக் கொண்டிருந்தனர் என்றும் வளரும் நாடுகளில் ஏறத்தாழ நான்கு பேருக்கு ஒருவர் வீதம் திறந்த வெளியில் தங்கள் கழிவுகளை வெளியேற்றுகின்றனர் என்றும் கூறபப்டுகின்றது.







All the contents on this site are copyrighted ©.