2009-10-15 16:56:37

அன்னை தெரசாவின் கல்லறையை அடுத்தக் கோவிலில் குருக்களுக்கென்று சிறப்பான நற்கருணை வழிபாடு.


அக். 15, 2009. ஜூலை மாதம் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் இவ்வாண்டினைக் குருக்களுக்கென்று அர்பணிக்கப்பட்ட ஆண்டு என அறிவித்தது முதல், கொல்கொத்தாவில் முத்திபேறு பெற்ற அன்னை தெரசாவின் கல்லறையை அடுத்தக் கோவிலில் ஒவ்வொரு வியாழனன்றும் குருக்களுக்கேன்று சிறப்பான நற்கருணை வழிபாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரசாவின் கல்லறை இருக்குமிடம் கொல்கொத்தாவின் மையப் பகுதியில் இருப்பதால், குருக்கள், துறவியர், மக்கள் அனைவரும் இந்த நற்கருணை வழிபாட்டில் நாள் முழுவதும் பங்கேற்க ஏதுவாக உள்ளதென, இந்த முயற்சியை ஆரம்பித்து வைத்த அருட் தந்தை பிரான்சிஸ் ரொசாரியோ கூறினார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பிறரன்பு மறைபோதாக சபை கன்னியர்கள் அன்னை தெரசா குருகளுக்காக உருவாக்கிய சிறப்பு செபத்தை இந்த ஆண்டு முழுவதும் செபித்து வருவதாக, அச்சபையின் தலைவி அருட்சகோதரி பிரேமா கூறினார்.
அன்னை தெரசாவின் உடலைத் தங்கள் நாட்டுக்கு அனுப்பும்படி அல்பேனியப் பிரதமர் இந்திய அரசைக் கேட்டுக் கொண்டதும், அதை இந்திய அரசு மறுத்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.