2009-10-14 16:15:39

பங்களாதேஷ் குருக்கள் கணணி வழித் தொடர்பு கொள்ளுதலில் அதிக சவால்கள்


அக்.14,2009 குருக்கள் கணணி வழித் தொடர்பு கொள்ளுதல் என்பதை அடுத்த ஆண்டு உலகத் தொடர்பு நாளின் மையப் பொருளாக வத்திக்கான் அறிவித்திருக்கும் வேளையில், இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்துவதில் பங்களாதேஷ் குருக்கள் அதிக சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளதென டாக்காவில் உள்ள கிறிஸ்தவ தொடர்பு சாதன மையத்தின் இயக்குனர் அருட்தந்தை கமல் கொரயா (Kamal Corraya ) தெரிவித்தார்.

மின் துண்டிப்பு அடிக்கடி ஏற்படும் தங்கள் நாட்டில் கணணி, தொலைக்காட்சி போன்ற சமூகத் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதில் பெறும் பிரச்சனைகள் இருப்பதாகவும், செல் தொலை பேசி மட்டுமே அவர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சாதனமாக உள்ள தெனவும் அருட்தந்தை கொரயா தெரிவித்தார்.
2010 ம் ஆண்டு ஜனவரியில் திருத்தந்தை உலகத் தொடர்பு சாதன நாளுக்கான செய்தியை வெளியிடுவார் என்பதை நினைவுகூர்ந்த அருட்தந்தை கொரயா, கிறிஸ்தவ தொடர்பு சாதன மையத்தின் வழியாக குருக்களும், துறவிகளும் பங்களாதேஷில் தொடர்பு சாதனம் குறித்து எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும் வழி முறைகள் கருத்தரங்குகள் மூலம் சொல்லிதரப்படுகின்றன என்று செய்தியாளர்களிடம் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.