2009-10-14 16:15:24

அப்போஸ்தலர்களின் புனித பொருட்கள் அடங்கிய புனித காட்சி-அமெரிக்க நகரங்களில்  


அக்.14,2009 புனிதர்களான அப்போஸ்தலர்கள், நற்செய்தியாளர்கள் ஆகியோரின் புனித பொருட்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பல்வேறு நகரங்களில் விசுவாசிகளின் பார்வைக்கு வைக்கப் படுகின்றன. புனிதர்களான பேதுரு, பவுல், தோமா, யோவான், இன்னும் பல புனிதர்களின் புனித பொருட்கள் அடங்கிய இந்த புனித காட்சியை லாஸ் ஆன்ஜெலஸ் (Los Angeles ) நகரைச் சார்ந்த புனித பண்டங்களைப் பாதுகாக்கும் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.
மக்களின் விசுவாசத்தை, சிறப்பாக இளையோரின் விசுவாசத்தை மீண்டும் தூண்டி எழுப்பும் நோக்கத்தோடு இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சி அடுத்த ஆண்டு வரை தொடர்ந்து நடைபெறும் என்று செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.