2009-10-10 16:40:13

நைஜீரியாவில் பதினைந்தாயிரம் போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்துள்ளனர்


அக்.10,2009 மேற்கு ஆப்ரி்க்க நாடான நைஜீரியாவில் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதப் பொது மன்னிப்பின்கீழ் ஏறத்தாழ பதினைந்தாயிரம் போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்துள்ளனர் என்று அரசு அறிவித்தது.

நைஜர் டெல்டா பகுதியில் போராடிய போராளிகள் ஐந்தாயிரம் ஆயுதங்களையும் 18 சிறு பீரங்கிப் போர் கப்பல்களையும் கையளித்துள்ளனர் என்றும் அரசு அறிவித்தது.

இதற்கிடையே, ஆயுதங்களோடு சரணடைந்தவர்களிடம் மீண்டும் ஆயுதங்களை அளித்து மோதலைத் தொடங்கவுள்ளதாக ஒரு புரட்சிக் குழு எச்சரித்துள்ளது.

இன்னும், அரசு தங்களுக்கு வழங்குவதாக உறுதியளித்த 435 டாலர் மீள்குடியேற்றத் தொகை வழங்கப்படவில்லையெனவும் சில முன்னாள் போராளிகள் குறை கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.