2009-10-10 16:24:42

இன்றைய புனிதர்: முத்திபேறு பெற்ற 23 ஆம் அருளப்பர்.


"திருச்சபையின் கதவுகளைத் திறந்து விடுங்கள். மாற்றம் என்னும் புதிய காற்று, புதிய ஆவி வீசட்டும்." என்ற அறைகூவலுடன் 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் திருத்தந்தையாக இருந்த முத்திபேறு பெற்ற 23 ஆம் அருளப்பர் இரண்டாம் வத்திக்கான் பொது சங்கத்தை ஆரம்பித்தார். அந்த நாள் இந்தப் புனித திருத்தந்தையின் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அவர் அன்று கத்தோலிக்கத் திருச்சபையில் ஆரம்பித்து வைத்த மாற்றங்கள் ஒரு சிலருக்கு அதிர்ச்சியை அளித்தாலும், பெரும்பாலானோர் இம்மாற்றங்களைப் பெரிதும் வரவேற்றனர்.

 1881 ஆம் ஆண்டு வட இத்தாலியில் பெர்காமோ என்ற இடத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் ஆன்ஜெலோ ஜிசுப்பே ரோங்காலி பிறந்தார். தனது 23 வது வயதில் குருவான இவர், 44 வது வயதில் ஆயராக அர்ச்சிக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது துருக்கி, பல்கேரியா நாடுகளில் திருப்பீடத் தூதராக அனுப்பப்பட்டார். அவ்வேளையில் பிற திருச்சபைகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டார்.
1958 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் இறந்ததை அடுத்து தனது 78 வது வயதில் இவர் திருத்தந்தையாகப் பொறுபேற்றார். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட திருத்தந்தை 23 ஆம் அருளப்பர், மக்களின் திருத்தந்தை என எல்லாராலும் போற்றப்படுபவர். இவரை 2000 ம் ஆண்டு திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் முத்திபேறு பெற்றவராக அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.