2009-10-10 16:19:44

ஆயுத வியாபாரத் தடை உடன்படிக்கைக்குப் பிரிட்டன் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் அழைப்பு


அக்.10,2009 ஆயுத வியாபாரத் தடை உடன்படிக்கை, மனித உரிமை மீறல்களைத் தடுக்கவும் உலகெங்கும் மக்களின் வாழ்க்கை ஆதாரங்களைப் பாதுகாக்கவும் உதவும் என்பதால் அந்த ஒப்பந்தம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரிட்டன் கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பிரிட்டன் கத்தோலிக்க ஆயர் பேரவையின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆணைய உறுப்பினரான பிர்மிங்காம் துணை ஆயர் வில்லியம் கென்னி உட்பட பிற கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் இணைந்து த டைம்ஸ் இதழில் வெளியிட்டுள்ள கடிதத்தில், ஆயுத வியாபார தடை உடன்படிக்கைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சட்டத்துக்குப் புறம்பேயான ஆயுத வியாபாரத்தால் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் வீதம் கொல்லப்படுகின்றனர், இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்று ஐ.நா.வளர்ச்சித் திட்ட அமைப்பு கணித்துள்ளது.

இந்நிலையில் மனிதத் துயரங்களைக் குறைக்கும் விதமாக, ஆயுத வியாபாரத்தைத் தடை செய்வதற்கு அரசுகளுக்கு நன்னெறி ரீதியான கடமை உள்ளது என்று அக்கடிதம் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.