2009-10-10 16:25:56

அக். 11, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1582 - கிரெகொரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.

1852 - ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1865 - ஜமெய்க்காவில் நூற்றுக்கும் அதிகமான கறுப்பின மக்கள் அரசுக்கெதிரான எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

1902 – இந்தியாவின் விடுதலை போராட்ட வீரர் ஜெயப்ரகாஷ் நாராயணன் பிறந்த நாள்.

1962 - திருத்தந்தை 23 ஆம் அருளப்பர் இரண்டாம் வத்திக்கான் போது சங்கத்தை ஆரம்பித்தார்.

1968 - நாசா முதற் முறையாக மூன்று விண்வேளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது.







All the contents on this site are copyrighted ©.