2009-10-09 14:36:37

முதல் உலகத்திலிருந்து ஆப்ரிக்காவுக்கு ஆன்மீக நச்சுக் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன, பேரவைத் தந்தையர்


அக்.09,2009 ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவையின் இவ்வெள்ளி காலை பொது அமர்வு திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இருப்பில் தொடங்கியது.

இப்பேரவையின் இறுதியில் வெளியிடப்படும் செய்தியைத் தயாரிப்பதற்கென மொழி வாரியான குழுக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இப்பேரவையின் ஆறாவது பொது அமர்வில் பேசிய, திருப்பீட குடும்ப அவைத் தலைவர் கர்தினால் என்னியோ அந்தோனெல்லி, முதல் உலகத்திலிருந்து ஆப்ரிக்காவுக்கு ஆன்மீக நச்சுக் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று குறை கூறினார்.

பெண்களுக்கு எதிரான அநீதிகள், வன்முறைகள், குழந்தை இறப்பு, ஊட்டச்சத்துக்குறைவு, பஞ்சம், குடியிருப்பு, வேலை போன்ற ஆப்ரிக்கா எதிர் கொள்ளும் பிரச்சனைகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், சமத்துவம், சுகாதாரம், சுதந்திரம் ஆகியவற்றின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இவைகளுக்கான தீர்வு முன்வைக்கப்படுகின்றது, ஆனால் இது மனித இனம் பற்றிய புதிய அர்த்தத்தை அம்மக்களுக்குக் கொடுக்கின்றது என்று கூறினார்.

எனவே இதில் குருக்களும் துறவியரும் பொதுநிலை மேய்ப்புப்பணியாளரும் விழிப்புடன் இருக்குமாறு அழைப்பு விடுப்பதாகவும் கர்தினால் அந்தோனெல்லி கூறினார்.

இன்னும், ஆப்ரிக்காவைப் புனிதர்களின் பூமியாகக் குறிப்பிட்ட பேராயர் ஆஞ்சலோ அமாத்தோ, 22 ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த 13 அருளாளர்கள், 27 இறையடியார்கள், நான்கு வணக்கத்துக்குரியவர்கள் இருக்கின்றார்கள் என்று இப்பேரவையில் அறிவித்தார்.

 








All the contents on this site are copyrighted ©.