2009-10-08 15:55:39

கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றினார் கர்தினால் பெர்தோனே 


அக். 08, 2009 இன்றைய உலகில், சிறப்பாக, மேற்கித்திய நாடுகளில் வாழ்க்கை என்பது பணம், புகழ் இவை தரும் பாதுகாப்பையே அதிகம் சார்ந்திருக்கிறது. எனவே, ஆன்மீக ஈடுபாடு குறைந்து வருகிறது என திருப்பீட செயலர் கர்தினால் தார்சிஸியொ பெர்தோனே கூறினார்.

"வலிமையும், அருளும்: ஐரோப்பாவின் புனித பாதுகாவலர்கள்" என்ற மையப் பொருளைக் கொண்ட ஒரு கண்காட்சியை நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையில், கர்தினால் பெர்தோனே இவ்வாறு கூறினார்.

இன்றைய இளையத் தலைமுறையினர் பார்ப்பதும், கேட்பதும் இவ்வுலகச் சிந்தனைகளாலேயே நிரப்பப்படுவதாகவும் இதனால் மனசாட்சியின் குரலுக்கு அவர்கள் செவி மடுப்பது குறைந்து வருவதாகவும் கர்தினால் கூறினார்.
ஒவ்வொரு நூற்றாண்டிலும், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் நற்செய்தியை அடிப்படையாகக் கொண்டு துணிவுடன் வாழ்ந்த மனிதர்களை வரலாறு கண்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் அத்தகையோரின் வாழ்வை ஓவியங்கள் வழியே நாம் காணும் போது, நமது மனங்களும் மேலேழுப்பப் படுகின்றன என்று கூறினார் கர்தினால் தார்சிஸியொ பெர்தொனே.







All the contents on this site are copyrighted ©.