2009-10-08 15:57:47

அமெரிக்க ஐக்கிய நாடும் வத்திக்கானும் ஒன்றிணைந்து செயல்படும் - அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வத்திக்கான் தூதர் பேட்டி


அக். 08, 2009 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வத்திக்கான் தூதராக அண்மையில் நியமனம் பெற்ற மிகுவேல் தியாஸ் (Miguel Diaz ) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக பாரக் ஒபாமா பொறுப்பேற்றிருக்கும் இக்காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடும் வத்திக்கானும் இன்னும் அதிகமாக ஒன்றிணைந்து செயல் படும் சாத்தியக் கூறுகள் உள்ளதாக மிகுவேல் தியாஸ் (Miguel Diaz ) கூறினார்.

இறையியல் அறிஞரான தியாஸ் அமெரிக்க ஐக்கிய நாடும், வத்திக்கானும் ஒரு சில பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு கொண்டாலும், ஒரு பாலமாக அமைந்து செயல் படுவதைத் தன் தலையாயப் பணியாக ஏற்றிருப்பதாக வத்திக்கான் தூதர் மிகுவேல் தியாஸ் (Miguel Diaz ) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.