2009-10-07 17:26:21

இயற்கையோடு இயைந்த வகையில் துறவற வாழ்வு முறைகளை மாற்றி அமைப்பது அவசியம்


அக். 07, 2009 சுற்று சூழல் பற்றிய கவலைகள் துறவற வாழ்விலும், பணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென இந்தியாவின் துறவற சபைத் தலைவர்களின் அவை அழைப்பு விடுத்துள்ளது. "ஒருங்கிணைந்த இந்தியாவை நோக்கி" என்ற தலைப்பில் இந்த அவை அண்மையில் நடத்திய கருத்தரங்கில் 550 க்கும் மேற்பட்ட  துறவற சபைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் ஒருங்கிணைப்பு பற்றி சிந்திக்கும் போது, தாங்கள் எவ்வளவு தூரம் இயற்கையோடும் இயைந்த வாழ்வு மேற்கொள்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்தும் விவாதிக்கப்பட்டது.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூடும் இந்த அவையின் கருத்தரங்கில் இந்தியாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தண்ணீர் தட்டுப்பாட்டினால் அல்லல் உருவதையும், இந்த எண்ணிக்கை 2025 ம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயரும் ஆபத்து உள்ளது என்பதையும் கூறி, இந்த நிலயை மாற்ற இந்தியாவில் பணி புரியும் 125000 துறவறத்தார் சிறப்பாக, பொறுப்பாக செயல் பட வேண்டும் எனவும் இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
இயற்கையைச் சீரழிக்காத வகையில் துறவற வாழ்வு முறைகளை மாற்றி அமைப்பதும், தாங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகப் பணி மையங்கள் வழியாக இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வழிகள் சொல்லித் தருவதும் துறவரத்தாரின் கடமைஎன்ற எண்ணமும் இக்கருத்தரங்கில்வலியுறுத்தப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.