2009-10-06 17:40:13

ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவை ஆப்ரிக்காவின் அனைத்துக் கத்தோலிக்கர்களையும் ஒப்புரவு, நீதி மற்றும் அமைதியின் சேவர்களாக மாற்றுவதைத் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது, கானா நாட்டு கர்தினால்


அக்.06,2009 கடந்த ஞாயிறன்று வத்திக்கானில் தொடங்கிய ஆப்ரிக்காவுக்கான சிறப்பு ஆயர் பேரவை ஆப்ரிக்காவின் அனைத்துக் கத்தோலிக்கர்களையும் ஒப்புரவு, நீதி மற்றும் அமைதியின் சேவர்களாக மாற்றுவதைத் தன் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கானா நாட்டு கர்தினால் பீட்டர் கோட்வோ அப்பியா டர்க்ஸன் இப்பேரவையில் கூறினார்.

உலகின் அபரிவிதமான கொடைகளைக் கொண்டுள்ள ஆப்ரிக்கக் கண்டம் ஏழ்மையில் வாடுவது முரண்பாடாக உள்ளது என்ற கவலையை வெளியிட்ட கர்தினால், சீர்கேடான நிர்வாகத்தால் பொருளாதாரம் சீரழியவே செய்யும் எனவும் கூறினார்.

மோசமான பொருளாதாரம், போதைப் பொருட்கள், ஆயுதக் கடத்தல், சுற்றுச்சூழல் பிரச்சனை போன்றவை, ஆப்ரிக்கக் கண்டத்தின் நீதி மற்றும் அமைதிக்குத் தடைகற்களாக நிற்கின்றன என்ற அவர், திருமணத்திற்கு வெளியே ஆணும் பெண்ணும் கூடிவாழும் முறையாலும் சமுதாயம் வெகு அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.








All the contents on this site are copyrighted ©.