2009-10-03 18:17:59

இன்றைய புனிதர்: அசிசியின் புனித பிரான்சிஸ்


இத்தாலி, அசிசி நகரில் 1181 ல் பிறந்த பிரான்சிஸ் இளவயதில் வீரனாக வாழ்ந்து தளபதி பட்டம் பெற அதிகம் ஆவல் கொண்டார். பெருஜியாவுக்கு எதிராக, அசிசி போர் தொடுத்த போது, இவரும் படையில் சேர்ந்தார். எதிரிகளால் சிறை படுத்தப்பட்டு, ஓராண்டு சிறை வாசம் அனுபவித்தார். சிறையிலிருந்து வீடு திரும்பியபின், புனித தமியானோ கோவிலில் சிலுவையிலிருந்து ஒலித்த குரல் இவர் வாழ்வுப் பாதையை மாற்றியது.

இவரது தந்தையின் கனவை பொய்ப்பித்து துறவறம் பூண்டார். 1209 ஆம் ஆண்டு 12 இளையோருடன், "சிறு சகோதரர்கள்" என்ற சபையை ஆரம்பித்தார். 1212 ல் "கிளாரின் ஏழைகள்" என்ற பெண்கள் சபையையும், 1221 ல் போதுநிலையினரைக் கொண்டு மூன்றாம் சபையையும் ஆரம்பித்தார். 1226 , அக்டோபர் 3 ஆம் தேதி தனது 44 வது வயதில் இறையடி சேர்ந்தார். இரண்டே ஆண்டுகளில் திருத்தந்தை 9 ஆம் கிரகோரி இவரைப் புனிதராக உயர்த்தினார்.







All the contents on this site are copyrighted ©.