2009-10-02 15:00:03

மனித மாண்பைப் பாதுகாத்தல், கருவறை முதல் இயற்கையான மரணம் அடையும் வரை மனிதனுக்கு இருக்கும் வாழ்வதற்கான தவிர்க்க இயலாத உரிமையை மதித்தல் போன்ற விவகாரங்களில் தெளிவான தேர்ந்து தெளிதல் தேவை, திருத்தந்தை


அக்.02,2009 திருப்பீடத்துக்கான அமெரிக்க ஐக்கிய நாட்டுப் புதிய தூதுவர் மிகுவேல் ஹூம்பெர்த்தோ டயாஸிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, இவ்விரு நாடுகளுக்குமிடையே 25 ஆண்டுகளாக வளர்ந்து வரும் உறவு தொடர்ந்து முன்னேறும் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார்.

மனித வாழ்வு, சுதந்திரம், நிலையான மகிழ்ச்சி ஆகிய விழுமியங்கள் தனிப்பட்டவரின் அல்லது தேசிய அளவில் மட்டும் நோக்கப்படாமல் இவை அனைத்து மனித சமுதாயத்திற்கும் உரியதாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

அதிபர் ஒபாமா தலைமையில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவையில் நடைபெற்ற அணுஆயுதக் களைவு குறித்தும் தனது பாராட்டைத் தெரிவித்த அவர், அதில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் உலகை அணுஆயுதங்கள் இல்லாத இடமாக அமைக்கும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

மனித மாண்பைப் பாதுகாத்தல், கருவறை முதல் இயற்கையான மரணம் அடையும் வரை மனிதனுக்கு இருக்கும் வாழ்வதற்கான தவிர்க்க இயலாத உரிமையை மதித்தல் போன்ற விவகாரங்களில் தெளிவான தேர்ந்து தெளிதல் தேவை என்றும் திருத்தந்தை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.