2009-10-02 15:05:53

எய்ட்ஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா இன்னும் அதிகமாகத் தன்னை ஈடுபடுத்துமாறு ஐ.நா.அதிகாரி வலியுறுத்தல்


அக்.02,2009 தென்னாப்ரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிகமான எய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்டுள்ள இந்தியா எய்ட்ஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் இன்னும் அதிகமாகத் தன்னை ஈடுபடுத்துமாறு வலியுறுத்தினார் ஐ.நா.அதிகாரி ஒருவர்.

எய்ட்ஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை நேர்த்தியாகச் செய்து வரும் இந்தியா, அதனைத் தொடர்ந்து செய்யுமாறும் அதற்குத் தேவையான நிதி கிடைக்க வழி செய்யுமாறும் இந்தியாவுக்கான ஐ.நா. எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் ஜி்ல்கா கூறினார்.

2007ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகில் ஏறத்தாழ 3 கோடியே 30 இலட்சம் பேர் எய்ட்ஸ் நோயாளிகள். எனினும் 27 இலட்சம் பேர் இதனால் புதிதாகத் தாக்கப்பட்டனர் மற்றும் 20 இலட்சம் பேர் இறந்தனர்.

தற்சமயம் தென்னாப்ரிக்காவில் 52 இலட்சம் பேரும் நைஜீரியாவில் 26 இலட்சம் பேரும் இந்தியாவில் 23 இலட்சம் பேரும் எய்ட்ஸ் நோய் கிருமிகளுடன் வாழ்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.