2009-10-01 17:14:45

வடக்கு சமோவா சுனாமி பாதிப்பைச் சீரமைக்கத் தேவையான உதவிகள் வழங்குவதில் காரித்தாஸ் நிறுவனம் 


அக். 2, 2009 வடக்கு சமோவாவில் ஏற்பட்ட நில நடுக்கம், சுனாமி இவற்றின் பாதிப்பைப் பார்வையிட்டு, தேவையான உதவிகள் வழங்குவதில் காரித்தாஸ் நிறுவனம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. சவாயில் லோகோயிபுலோது கத்தோலிக்க அருட்பணிக் குழு மையம் அவசரக் கால மருத்துவமனையாக மாற்றப்பட்டு, பல நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சை அளித்து வருகிறது. வடக்கு சமோவாவின் சமூக முன்னேற்ற செயல்பாடுகளில் ஏற்கனவே ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியாவின் காரித்தாஸ் அமைப்பு இந்த சுனாமிக்குப் பிறகு அதிக ஈடுபாட்டுடன் பணி புரிந்து வருகிறது.








All the contents on this site are copyrighted ©.