2009-10-01 17:15:50

சிறை கைதிகளுக்கும் அவர்களது குடும்பக்களுக்கும் கன்னியர்கள் பணி 


அக். 2, 2009 சிறை கைதிகளுக்கும் அவர்களது குடும்பக்களுக்கும் எதிகாலத்தைப் பற்றிய நம்பிக்கையை வளர்ப்பதற்கும், அவர்கள் மீண்டும் சமுதாயத்தில் இயல்பு வாழ்வை மேற்கொள்ள அரசு எடுக்கும் முயற்சிகளில் உதவுவதற்கும் அப்போஸ்தலிக்க கார்மேல் சபையைச் சார்ந்த கன்னியர்கள் கிழக்கு இந்தியப் பகுதிகளில் பணி புரிந்து வருகின்றனர். கல்கத்தாவில் இரு கன்னியரும் மூன்று போது நிலையினரும் மேற்கொண்டுள்ள இந்த பணியால், சிறையில் உள்ள 500 பெண்கள் உட்பட ஏறத்தாழ 8000 பேர் பயன் பெறுகின்றனர். இளங்குற்றவாளிகளைச் சீரமைக்கும் பள்ளியில் பயின்று வரும் 120 பேர் இக்கன்னியரிடமிருந்து "மீண்டும் வீட்டிற்கு" என்ற அமைப்பின் மூலம் நல்ல கல்வி பெற்று வருகின்றனர். இந்த அமைப்பில் இயேசு சபை, சலேசிய சபைகளைச் சேர்ந்த பல துறவியரும் இணைந்து பணி புரிகின்றனர் என்று செய்தி குறிப்பு ஒன்று சொல்கிறது.







All the contents on this site are copyrighted ©.