2009-10-01 17:13:59

அணு ஆயுதக் களைவு பற்றி பேராயர் தொமினிக் மாம்பெர்தி


அக். 2, 2009 அணு ஆயுதக் களைவு பற்றி விவாதிக்க, உலகின் அனைத்து அரசுத் தலைவர்களின் உச்சிமாநாட்டைக் ஏற்பாடு செய்து வரும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் முயற்சியைத் திருப்பீடம் முழுமையாக ஆதரிப்பதாக, திருப்பீடத்தின் வெளியுறவுத் துறையின் செயலர் பேராயர் தொமினிக் மாம்பெர்தி கூறியுள்ளார். 2010 ல் நடக்கவிருக்கும் அணு ஆயுதக் களைவு மறுபரிசீலனைக்கான கருத்தரங்கு நெருங்கி வரும் வேளையில் இத்தகையதொரு முயற்சி உற்ச்சாகமூட்டுவதாக உள்ளது என பேராயர் கூறினார். அண்மையில் செப்டம்பர் மாதத்தில் நடந்து முடிந்த உலக சமாதான நாளன்று "நாம் கட்டாயம் ஆயுதங்களைக் களைய வேண்டும்." என்று ஐக்கிய நாட்டு தலைமைச் செயலர் விடுத்த சிறப்பு கோரிக்கையைத் திருப்பீடம் முற்றிலும் ஆதரித்து உறுதி செய்கிறது என பேராயர் மாம்பெர்தி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.