2009-09-29 17:35:00

இன்றைய புனிதர்: புனித ஜெரோம்


யுகோஸ்லாவியாவைச் சேர்ந்த டால்மேஷியாவில் நான்காம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த இவர், ரோமையில் படித்து பின்னர் இன்னும் அதிகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல நாடுகளுக்குச் சென்றார். லத்தின், கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளில் புலமை அடைந்த இவர், தனது 39 வது வயதில் குருப்பட்டம் பெற்றார். பல ஆண்டுகள் பல்வேறு இடங்களில் பணி புரிந்து, இறுதியாக பாலஸ்தீனம் அடைந்தார். அங்கு 5 ஆண்டுகள் பாலைவனத்தில் வாழ்ந்தார். விவிலியத்தை எபிரேயம், அரமேயிக் ஆகிய மொழிகளிலிருந்து நேரடியாக லத்தினுக்கு மொழி பெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு வல்கேட் (அதாவது, சாதாரணமாக பயன்படுத்துவது) என்று பெயர் பெற்றது. இந்த மொழிபெயர்ப்பை ட்ரென்ட் பொதுச்சங்கம் திருச்சபையின் அதிகாரப்பூர்வமான மொழிபெயர்ப்பு என்று கூறியது. இவர் 420 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் நாள் இறையடி சேர்ந்தார். இவர் நூல்நிலைய கண்காணிப்பாளர்களின் பாதுகாவலர் எனக் கருதப்படுகிறார்.







All the contents on this site are copyrighted ©.