2009-09-29 17:27:56

ஆப்ரிக்காவின் ஐக்கியத்தைக் கட்டிக் காப்பது குறித்து ஆயர் மாநாட்டில் முக்கியத்துவம் 


ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளில் இன மோதல்களைச் சந்தித்து வரும் அக்கண்டத்தின் தலத்திருச்சபை தன் ஐக்கியத்தைக் கட்டிக் காப்பது குறித்து ஆப்ரிக்காவுக்கான ஆயர் மாநாட்டில் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கும் என்றார் கானா நாட்டு கர்தினால் பீட்டர் டர்க்சன். ஆப்ரிக்காவின் கத்தோலிக்க மதம் இதில் நேரடியாக ஈடுபடவில்லை எனினும், இது அனைத்து மக்களையும் பாதிக்கும் ஒன்றாக உள்ளது என்ற கர்தினால், பல்வேறு இனங்களின் வேறுபாடுகள் நன்மைதரும் கூறாகவே நோக்கப்பட வேண்டிய சூழலில், திருச்சபையில் இருக்க வேண்டிய ஐக்கியத்திற்கு அவை இடையூறாக இருப்பது வருத்தம் தருவது என்றார். ருவாண்டா, உகாண்டா, நைஜீரியா மற்றும் கென்யா நாடுகளில் நடக்கும் மோதல்கள் பல ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்புக்கும், லட்சக்கணக்கானோரின் குடிபெயர்வுகளுக்கும் காரணமாகியுள்ளதையும் கர்தினால் டர்க்சன் சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.