2009-09-26 17:48:46

இன்றைய புனிதர்: புனித வின்சென்ட் தே பவுல்


1581 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்த வின்சென்ட், 19 ஆவது வயதில் குருப்பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் கழித்து, துருக்கிய கடல் கொள்ளைகாரர்களால் சிறை படுத்தப்பட்டு அடிமையாக்கப்ப்பட்டார். இரு ஆண்டுகளில் அவர்களிடமிருந்து தப்பினார். தப்பி வரும் போது, தன்னை அடிமையாக நடத்திய மேற்பார்வையாளரையும் கிறிஸ்தவராக மனம் மாற்றி தன்னோடு அழைத்து வந்தார். இந்த அடிமைவாழ்வு அனுபவத்தினால், அவர் தன் வாழ்வை ஏழைகள், அடிமைகளுக்காக முழுவதும் அர்ப்பணித்தார். இந்தப் பணியை செய்வதற்கு ஆண், பெண் துறவியருக்கான இரு சபைகளையும், போதுநிலையினருக்கான மூன்றாம் சபையையும் உருவாக்கினார். 1660ஆம் அண்டு இறையடி சேர்ந்த வின்சென்ட், 1737ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் க்ளெமேன்டால் புனிதராக உயர்த்தப்பெற்றார். திருத்தந்தை 13 ஆம் லியோ இவரை பிறரன்பு பணியாற்றும் எல்லா சபைகளுக்கும் பாதுகாவலராக அறிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.