2009-09-25 16:01:04

இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளை வருங்கால சந்ததியினர் மீது சுமத்துவது நீதியல்ல - திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் 


செப். 26, 2009 நாம் இன்றைய உலகில் இயற்கை வளங்களை வீணாக்குவதால், ஏழைகளும் வருங்கால சந்ததியினரும் பாதிக்கப்படுவதும், நமது இன்றையப் பொறுப்புகளை வருங்கால சந்ததியினர் மீது சுமத்துவதும் நீதியல்ல; எனவே, இன்றைய உலகின் பல அரசுகளும் இயற்கை அழிவைத் தடுப்பதில் தலையாய கவனம் செலுத்த வேண்டும் எனத் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் அழைப்பு விடுத்துள்ளார். 

கால நிலை மாற்றங்களை மையப்படுத்தி, கொபன்ஹேகனில் வரும் டிசம்பர் நடைபெற உள்ள அகில உலக மாநாட்டிற்கு முன்னேற்பாடாக, நடைபெறும் அனைத்து நாடுகளின் கூட்டத்திற்கு வந்திருந்த அங்கத்தினர்களிடம் வீடியோ மூலம் பேசியத திருத்தந்தை, "இயற்கை என்பது கடவுளால் அனைத்து மக்களுக்கும் சரிசமமாக வழங்கப்பட்ட ஒரு கோடை, எனவே அதைத் தகுந்த முறையில் பயன்படுத்துவதில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும்." என்று கூறினார்.
ஒவ்வொரு நாடும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் அளவு, பயன்படுத்தும் வழிகள் ஆகியவை உலகஅரங்கில் எல்லாருக்கும் தெளிவாக, உண்மையுடன் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் திருத்தந்தை 16 ஆம் பெனெடிக்ட் தன் உரையில் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.