2009-09-24 17:12:46

 பட்டினியால் வாடும் மக்களை உலகத்தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும் 


செப். 25, 2009 அமெரிக்காவில்  பிட்ஸ்பர்க் நகரில் செப். 24, 25 ஆகிய இரு நாட்கள் நடைபெறும் G - 20 உச்சி மாநாட்டில் இன்றையப் பொருளாதாரப் பின்னடைவால், பட்டினியால் வாடும் ஏறத்தாழ 100 கோடி மக்களை உலகத்தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையைப் பெரும்பான்மையான மதத் தலைவர்கள் முன் வைத்துள்ளனர்.
 இந்த உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, "உலகிற்கு உணவு: பசியை நீக்கும் ஒன்றிணைப்பு" என்ற அமைப்பின் கீழ், கிறிஸ்தவர், யூதர், இஸ்லாமியர், சீக்கியர் என உலகின் முப்பது மதத் தலைவர்கள் ஒன்று கூடி பிட்ஸ்பர்கில் நிகழும் உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களை நேரடியாகச் சந்திக்க முடிவெடுத்தனர். இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற ஓய்வுபெற்ற பிட்ஸ்பர்க் துணை ஆயர் வில்லியம் வின்டர் "உலகத் தலைவர்கள் பொருளாதாரப் பின்னடைவை நீக்கும் வழிகளை ஆராயும் போது, உலகில் வாடும் பல கோடி வறியோரைக் குறித்தும் விவாதிப்பார்கள் என உலக மதத்தலைவர்கள் நம்புவதாகக் குறிப்பிட்டார்.







All the contents on this site are copyrighted ©.