2009-09-21 16:56:17

ஆப்ரிக்க கல்விக்கென கானட ஆயர்களின் நிதி உதவி.


செப். 21. 1977ம் ஆண்டு முதல் கானடா பள்ளிகள் மூலம் நிதி திரட்டி ஏழை நாடுகளின் பல்வேறு கல்வி வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கி வரும் கானடா தலத்திருச்சபை, இவ்வாண்டு நிதியை ஆப்ரிக்காவின் மலாவி மற்றும் ருவாண்டாவின் கல்வி திட்டங்களுக்கென வழங்கவுள்ளதாக அறிவுத்துள்ளது.

குழந்தைகளுக்கான ஐ.நா. நிதி அமைப்பான யுனிசெப் மூலம் வழங்கப்பட உள்ள கானட ஆயர்களின் இந்நிதி, ஏழை ஆப்ரிக்க நாடுகளில் பள்ளிகளைக் கட்ட, சீரமைக்க, மரச்சாமான்கள், புத்தகங்கள், விளையாட்டுத் துறைக்கான பொருட்கள் வாங்க, குடிநீர் வசதியை உருவாக்க மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க என பயன்படுத்தப்படும்.








All the contents on this site are copyrighted ©.