2009-09-19 18:12:34

இன்றைய புனிதர்: புனித ஆன்ரு கிம்


18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கொரியாவில் கிறிஸ்தவர்களுக்கெதிரான வேத கலகம் தீவிரமாக எழுந்தது. 1821 ஆம் ஆண்டு பிறந்த ஆன்ரு கிம், மறைசாட்சியாக இறந்த இக்னேசியஸ் கிம் என்பவரது மகன். இவர் சீனாவில் குரு மடத்தில் சேர்ந்து, 1845ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். குருவாக திருநிலைபடுத்தப்பட்ட கொரியாவின் முதல் குரு இவர்தான். தன் குருத்துவப் பணிகளைக் கொரியாவில் தொடர்வதற்கு மீண்டும் தாயகம் திரும்பிய இவர், 13 மாதங்கள் கழித்து, தனது 26 வது வயதில் தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தார். 1984 ஆம் அண்டு திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் இவரைப் புனிதராக உயர்த்தினார்.







All the contents on this site are copyrighted ©.