2009-09-18 16:13:07

வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை அலுவலகத்தைத் திறந்துவைத்தார் திருத்தந்தை.


செப். 19, 2009 வத்திக்கான் விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை அலுவலகத்தைக் காஸ்தல் கந்தோல்போவில் திறந்துவைத்தார் திருத்தந்தை. விண்வெளி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இயேசு சபை குருக்களுடன் ஒரு சில மணி நேரங்கள் செலவிட்ட திருத்தந்தை, அவர்கள் செய்து வரும் பணியைப் பாராட்டினார்.

1911 ஆம் ஆண்டு எகிப்தில் அலெக்சான்றியாவுக்கு அருகே மார்ஸ் கோளத்தில் இருந்து பூமியில் விழுந்த நாக்லா விண் வீழ் கல்லின் (meteorite) ஒரு சிறு துண்டைத் திருத்தந்தையிடம் இயேசுசபை குரு அருட்தந்தை காய்ன் (Coyne) கொடுத்தார்.

1935 இல் காஸ்தல் கந்தோல்போவில் ஆரம்பிக்கப்பட்ட விண்வெளி ஆய்வு மையம் ஆற்றும் பணிகள் அனைத்தையும் திருத்தந்தை ஆர்வமுடன் பார்வையிட்டார்.

இந்த ஆண்டு விண்வெளி ஆய்வினைச் சிறப்பிக்கும் சர்வதேச ஆண்டு என்பதால், திருத்தந்தை இந்த ஆய்வு மையத்தின் தலைமை அலுவலகத்தைத் திறந்து வைத்து, ஆசீர் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.