2009-09-17 15:16:58

பாகிஸ்தான் கண்டன ஊர்வலத்தில் கண்ணீர்  புகை. 


செப். 18, 2009. ராபர்ட் என்று தன்னையே அழைத்துவந்த பானிஷ் மாசி (Fanish Masih) என்ற 24 வயது இளைஞன் இறந்ததை அடுத்து பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. பானிஷ் தெய்வநிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். செப். 15 காலை சிறையில் அவர் இறந்து கிடந்ததாகவும், இது ஒரு தற்கொலை என்று காவல் துறை கூறியதாகவும் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது.

ஆனால் இது தற்கொலை அல்ல, மாறாக, காவல்துறையினரின் தாக்குதல் காரணமாக பானிஷ் இறந்திருப்பார் என்று கிறிஸ்தவ அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் கூறுகின்றன.

பானிஷின் உடலை நேற்று அடக்கம் செய்த போது அங்கு கூடி இருந்த மக்களைக் காவல் துறையினர் கண்ணீர் புகை கொண்டு கலைத்தனர். வன்முறை எதுவும் நடவாமல் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதென காவல் துறை கூறியது.
பாகிஸ்தான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் லாரென்ஸ் ஜான் சல்தானா, (Lawrence John Saldhana) இந்த மரணம் குறித்து நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும், இந்த மரணத்திற்கு காரணமாய் இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.