2009-09-17 15:18:25

ஐக்கிய நாடுகள்  அரசியல் செயல்பாடுகளின் நேரடி பொது காரியதரிசி இலங்கை பயணம்  


செப். 18, 2009. ஐக்கிய நாடுகள்  அரசியல் செயல்பாடுகளின் நேரடி பொது காரியதரிசி லின் பாஸ்கோ (Lynn Pascoe) புதனன்று மாலை மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றார். இவர் இலங்கையின் வட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிடுகிறார். போர் காரணமாக, உள் நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டிருக்கின்றனவா என்பதைக் கண்டறிய ஐக்கிய நாட்டு போது காரியதரிசி பான் கி மூன் (Ban Ki Moon) லின் பாஸ்கோவை இலங்கைக்கு அனுப்பியுள்ளார்.
செப். 18 வரை நீடிக்கும் இந்த பயணத்தின் போது, பாஸ்கோ இலங்கை நாட்டுத் தலைவர் மகிந்தா ராஜபஸ்கவையும், (Mahinda Rajapaska) மற்ற உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவார் என்றும், இலங்கையில் சமரச முயற்சிகள் தீவிரப் படுத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்புவதற்கு பாஸ்கோவின் பயணம் உதவும் என்ற நம்பிக்கை எழுவதாகவும் செய்திக்குறிப்புகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.