2009-09-16 10:07:08

புதிய ஆயர்களுக்கு திருப்பீடச் செயலரி்ன் உரை.


செப்.16, 2009. நவீன கால கோட்பாடுகளுக்கு இயைந்தவகையில் நம் விசுவாசத்தை மாற்றியமைக்க எவரும் தேடக்கூடாது என அழைப்பு விடுத்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் Tarcisio Bertone.

கடந்த 12 மாதங்களில் திருச்சபையில் திருநிலைப் படுத்தப்பட்ட புதிய ஆயர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய கர்தினால் Bertone, கிறிஸ்தவ விசுவாசத்தின் தன்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.

விசுவாசத்தைப் பொறுத்தவரையில் எந்த ஒரு முடிவும் ஆசையின் அடிப்படையிலோ, உணர்வுகளின் அடிப்படையிலோ அல்ல, மாறாக உண்மையின் அடிப்படையில் தேடப்படவேண்டும் என்ற அவர், தாழ்ச்சியின் மகத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.

விவேகம் என்பது உண்மையுள்ள மனிதர்களாக வாழ்வதையும், உண்மையான பகுத்தறிவு செயல்பாடுகளையும் குறிப்பிடுகிறது எனவும் அவர்களிடம் கூறினார், கர்தினால் Bertone.

தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒவ்வொரு ஆயரும் வாழ்வு சான்றுகள் மூலம் கற்பிக்க வேண்டும், அது குருக்களின் பாதுகாவலாரான புனித மரியா வியான்னியின் பாதையைப் பின்பற்றியதாக இருக்க வேண்டும் எனவும் புதிய ஆயர்களுக்கு அழைப்பு விடுத்தார், திருப்பீட செயலர் கர்தினால் Bertone.








All the contents on this site are copyrighted ©.