2009-09-16 16:21:29

சீன கத்தோலிக்கர்கள் ஆயர் ஹானின் மறைவை நினைவு கூருகின்றனர். 


செப். 17, 2009. 1999 ஆம் ஆண்டு சீன அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆயர் ஜான் ஹான் டிங்ஜியாங் (John Han Dingxiang) 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறையில் காலமானார். அவர் இறந்த உடன் அவரது உடலைத் தகனம் செய்து, சாம்பலை ஹெபெய் (Hebei) என்ற இடத்தில் சீன அரசு புதைத்தது. அவரது சாம்பல் புதைக்கப்பட்ட கல்லறைக்குக் கத்தோலிக்கர்கள் திருப்பயனமாக செல்ல ஆரம்பித்தனர். ஆயர் இறந்த இரண்டாம் ஆண்டு நிறைவாக நூற்றுக்கணக்கான மக்கள் அவரது கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தினர்.







All the contents on this site are copyrighted ©.