2009-09-16 16:20:43

உலக சமஸ்கிருத மாநாட்டில் இயேசு சபை குருவுக்கு பாராட்டு. 


செப். 17, 2009. பன்னாட்டு சமஸ்கிருத ஆய்வுக் கழகம் செப்டம்பர் மாத துவக்கத்தில் ஜப்பானில் க்யோடோ பல்கலை கழகத்தில் உலக சமஸ்கிருத மாநாட்டை ஏற்பாடு செய்தது.

அப்போது, சமயங்களின் வரலாறு என்ற தலைப்பில் மாநாட்டில் பல்வேறு ஆய்வாளர்களை வரவழைத்து, ஆழமான ஆய்வுக் கட்டுரைகளைப் பகிர்ந்து கொள்ள ஒருங்கிணைப்பாளராகச் செயல் பட்ட நோயல் ஷேத் என்ற இயேசு சபை குருவை க்யோடோ பல்கலை கழகம் தனிப்பட்ட முறையில் சிறப்பித்ததாக, சமஸ்கிருத துறைத் தலைவர் முனேயோ டோகுனக தெரிவித்தார்.

இந்த ஆய்வரங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக நோயல் ஷேத் தேர்ந்தெடுக்கப்பட்டது உலக அளவில் ஒரு தனி சிறப்பு என புனே ஆயரும், இந்திய சமய அறிஞருமான தாமஸ் தாப்ரே தெரிவித்தார்.
சமஸ்கிருதம் இந்திய, இந்து கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்கு சிறந்த வாயில் எனவும், இதன் வழியாக இந்து-கிறிஸ்தவ சமய உரையாடல்களை வலுப்படுத்தலாம் எனவும் ஆயர் தாப்ரே கூறினார்.







All the contents on this site are copyrighted ©.