2009-09-12 16:18:26

இயேசுவின் காலத்திய தொழுகைக் கூடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது


செப்.12,2009. புனித பூமியில் இயேசுவின் காலத்திய தொழுகைக் கூடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கலிலேயா கடற்கரைப் பகுதியில் திருப்பயணிகள் மையம் கட்டப்பட்டு வரும் மக்தலா எனுமிடத்தில் இயேசுவின் காலத்திய தொழுகைக் கூடம் ஒன்றின் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொழுகைக் கூடம் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும், கி.பி.66க்கும் 70 க்கும் இடைப்பட்ட காலத்தில் யூதர்கள் உரோமையருக்கெதிராகக் கிளர்ச்சி செய்த போது இது அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேல் தொல்பொருள் ஆய்வு அலுவலகம் அறிவித்தது.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஸ்ரேலுக்குத் திருப்பயணம் மேற்கொண்ட போது இந்த மகதலா மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 








All the contents on this site are copyrighted ©.