2009-09-12 17:42:16

இன்றைய புனிதர்


இன்றைய புனிதர் - ஜான் க்ரிஸொஸ்தம். ரோமானியப் படைத் தளபதிக்கும், கிரேக்கப் பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தவர் ஜான். அவருக்கு 23 வயதாகும்போது, அதுவரை அவர் பயின்று வந்த கிரேக்கப் பாடங்களிலிருந்து அவரை மாற்றி, விவிலியத்தைப் படிக்க அவரைத் தூண்டினார் அவரது நண்பரான புனித பாசில்.

37 வது வயதில் குருப்பட்டம் பெற்றார். 12 ஆண்டுகள் கழித்து, மாமன்னன் ஆர்கேடியஸ் யாருக்கும் தெரியாமல் அவரைக் கான்ச்டண்டிநோப்புளுக்கு வரவழைத்து அவரை ஆயராக நியமித்தார். ஆயரானதும், அவர் வாழ்ந்த ஆயர் இல்லத்தின் ஆடம்பர வாழ்வை முற்றிலும் மாற்றினார்.

அவரது மறை போதனைகளும், அவர் எழுதியப் புத்தகங்களும் பலரையும் நல வழிப் படுத்தின. அவரது புகழைச் சகியாத ஒரு சிலர் அவரை நாடு கடத்த முயன்றனர். இதைக் கேள்விப்பட்ட மக்கள் வேகுண்டேழுந்ததைக் கண்டு இந்த முயற்சி கைவிடப் பட்டது.

சில ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் நாடு கடத்தப்பட்டார். நாடோடியாக வாழ்ந்ததால், உடல் நலம் குன்றி, 407 ஆம் ஆண்டு தனது 58 வது வயதில் இறையடி சேர்ந்தார். திருச்சபையின் ஆயராகவும், மறைவல்லுனராகவும் கருதப்படுகிறார்.







All the contents on this site are copyrighted ©.