2009-09-10 16:42:48

மியான்மார் குருக்களை ஊக்குவிப்பது அவசியம். 


மியான்மரில் உள்ள குருக்கள் அருட்பணியில் முழுமையாக ஈடுபடுகின்றனர். ஆயினும், தனிமையாலும், சேவை செய்ய நிதி வசதிகள் இல்லாத நிலையாலும் மனம் தளர்ந்து விடுகின்றனர். அவர்களை ஊக்குவிப்பது அவசியம் என மியான்மார் குருக்களுக்கான பணிக்குழுவின் செயலர் அருட்தந்தை ஹென்றி ஐக்லீன் (Eikhlein) கூறியுள்ளார். இந்த ஆண்டு குருக்களின் ஆண்டாக இருப்பதால், குருக்களின் நல்வாழ்வில் மியான்மார் திருச்சபை இன்னும் அதிகம் கவனம் செலுத்துவது அவசியம் என அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் திருத்தந்தையால் அறிவிக்கப்பட்ட குருக்கள் ஆண்டில், குருக்கள் நாள்தோறும் நிகழ்த்தும் திருப்பலி, நற்கருணை ஆராதனை, செபமாலை இவைகளின் வழியாக தங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி கொணர வேண்டும் என அருட்தந்தை ஐக்லீன் கூறினார்.
வருகிற மார்ச் மாதம் மண்டலே (Mandalay) உயர் மறைமாவட்டத்தில் நடைபெறும் குருக்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் குருக்கள் தங்கள் பணி வாழ்வையும், தனிப்பட்ட வாழ்வையும் மேம்படுத்தும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் அருட்தந்தை கூறினார்.







All the contents on this site are copyrighted ©.