2009-09-09 16:09:48

வியட்னாமில் கத்தோலிக்கருக்கெதிரான வன்முறைக்கு ஆயர் கண்டனம்


செப்.09,2009. வியட்னாமில் பொதுநிலை விசுவாசிகள் மற்றும் குருக்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறையைக் கண்டித்துள்ள அதேவேளை, கத்தோலிக்கர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழுமாறு அந்நாட்டு “வின்” மறைமாவட்ட ஆயர் பவுல் மேரி காவோ துயென் அழைப்பு விடுத்தார்.

பழுதடைந்துள்ள பழங்கால ஆலயம் இருந்த டாம் டுவா என்ற இடத்திற்கருகில் செபக்கூடாரம் எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட 19 கத்தோலிக்கர், நாற்பது நாட்களுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்ட போது இவ்வாறு ஆயர் அழைப்பு விடுத்தார்.

திருச்சபையின் சொத்துக்கள் இன்னும் திருப்பி கொடுக்கப்படவில்லை, நம் சகோதர சகோதரிகள் அடிக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர், குறிப்பாக இரண்டு குருக்கள் மிகக் கொடூரமாயத் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆயரின் அறிக்கை கூறுகிறது







All the contents on this site are copyrighted ©.