2009-09-09 16:12:58

யூனிசெப் அமைப்பின் அலுவலகர் ஒருவரை இலங்கை அரசு, நாட்டை விட்டு வெளியேற்றத் தீர்மானித்திருப்பது குறித்த கவலை, ஐ.நா.


செப்.09,2009. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின், யூனிசெப் என்ற சிறுவர் நல நிதி அமைப்பின் அலுவலகர் ஒருவரை இலங்கை அரசு, நாட்டை விட்டு வெளியேற்றத் தீர்மானித்திருப்பது குறித்த ஏமாற்றத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதேசமயம், சிறாரின் சார்பில் யூனிசெப் நிறுவனம் செய்து வரும் பணிகளுக்கு அரசு ஆதரவு வழங்குமாறும் ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.

யூனிசெப் அமைப்புக்கான இலங்கைக் கிளையின் சமூகத் தொடர்புகளின் தலைவர் ஜேம்ஸ் எல்டர், இம்மாதம் 21 ஆம் தேதிக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அரசின் தீர்மானித்திற்கு ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூன் தனது அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இலங்கை மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு எற்படுகின்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து இந்திய புலனாய்வு பிரிவினர் ஆராயவுள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

இதற்காக வருகின்ற 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் இந்தியப் பிரதமரின் தலைமையில் மாநாடொன்று புதுடில்லியில் இடம்பெறவுள்ளது என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

 








All the contents on this site are copyrighted ©.