2009-09-09 15:44:36

திருத் தந்தையின் புதன்  பொது மறை போதகம் 


திருத் தந்தை 16 ஆம் பெனெடிக்ட் இன்று தன் மறை போதகத்தை வழங்கினார். வழக்கம் போல் இத்தாலியில் மறை போதகத்தை ஆரம்பித்த திருத்தந்தை, ஆங்கிலத்தில் உரையாற்றும்போது, ஆங்கிலம் பேசுகின்ற அனைத்து திருப்பயணிகளையும், வரவேற்று, வாழ்த்தினார்.

அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரை: RealAudioMP3

 செப். 9, 2009.  மேற்கு, கிழக்கு நாடுகளில் வாழ்ந்த கிறிஸ்துவ எழுத்தாளர்களைப் பற்றி நமது இன்றைய மறையுரையில் எதுத்துரைக்கிறோம். பதினோராம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரவேன்னாவில் பிறந்து, வாழ்ந்த புனித பீட்டர் டேமியன் சிறந்த ஒரு எழுத்தாளர். அவரது மென்மையான மனம் கவிதையில் வெளிப்பட்டது. உலகம் முழுவதையும் ஒரு உவமையாகக் கண்டார் இப்புனிதர். போன்டே அவேல்லானாவில் தன் துறவுமட வாழ்க்கையை ஆரம்பித்தார்.

உலகை மீட்கும் சிலுவையின் மறையுண்மை இவரைப் பெரிதும் கவர்ந்தது. கிறிஸ்துவ வாழ்வின் முழுமையைத் துறவு மடங்களில் காணப்படும் கடும் தவத்தின் மூலம் வளர்க்க முயன்றார். மூவொரு இறையுண்மை,  கிறிஸ்துவிலும் திருச்சபையிலும் நமது ஒன்றிப்பு போன்ற இறையியல் சிந்தனைகளில் ஆழம் கண்டவர் புனித டேமியன். 1057 இல் ஓஸ்தியாவின் கர்தினாலாக நியமனம் பெற்ற இவர், திருச்சபையில் மாற்றங்களை உருவாக்குவதில் துணிவுடன் திருத்தந்தைக்கு உதவிகள் செய்தார். பத்து ஆண்டுகள் இந்தப் பணியில் தீவிரமாக உழைத்தபின் மீண்டும் தன் துறவு மடத்திற்குத் திரும்பிச் செல்லத் திருத்தந்தையிடம் உத்தரவு பெற்றார். அங்கு தன் எஞ்சிய ஆண்டுகளைத் தவத்திலும், ஜெபத்திலும் செலவிட்டு 1072 இல் இறையடி சேர்ந்தார். புனித பீட்டர் டேமியனின் வாழ்வும், அவரது பரிந்துரையும் நமது வாழ்வில் புத்துயிர் ஊட்டி, கிறிஸ்துவின் மேலும், திருச்சபை மேலும் நமது அன்பை வளர்ப்பதாக. இறைவனின் அளவற்ற ஆசீர் நம் அனைவரையும் நிரப்புவதாக. RealAudioMP3

இவ்வாறு, தமது புதன் போது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ஆம் பெனெடிக்ட், திருப்பயணிகளை வாழ்த்தி, தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.