2009-09-09 16:13:56

ஜப்பான் அரசு, புருண்டி நாட்டுக் கடனை இரத்து செய்துள்ளது


செப்.09,2009. புருண்டி நாட்டின் பொருளாதாரத்திற்கு உதவும் நோக்கத்தில் அந்நாட்டின் ஏறத்தாழ 2 கோடியே 40 இலட்சம் யூரோ தொகை கொண்ட கடனை ஜப்பான் அரசு, இரத்து செய்துள்ளதாக புருண்டி நாட்டிற்கான ஜப்பான் தூதுவர் ஷிஜெயோ இவாட்டானி அறிவித்தார்.

ஜப்பானுக்கும் புருண்டிக்குமிடையேயான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்திலும் ஜப்பான் அரசு இதனைச் செய்துள்ளதாக அறிவித்த இவாட்டானி, புருண்டியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கென 70 இலட்சம் யூரோக்களைக் கொடுக்கவும் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

பல ஆண்டுகள் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள புருண்டியில் 2010ம் ஆண்டில் பொதுத் தேர்தல்களை நடத்துவதற்குத் தயாரிப்புகள் இடம் பெற்று வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.