2009-09-09 16:10:48

சர்வதேச அமைதி கருத்தரங்கு அடுத்த ஆண்டு பார்செலோனாவில் நடைபெறும்


செப்.09,2009. இரண்டாம் உலகப் போரின் கொடூரங்கள் வரலாற்றில் மீண்டும் நிகழாதிருப்பதற்கு உரையாடல் ஒன்றே ஒரே வழி என்ற ஆழமான உணர்வை நாத்சி வதைப்போர் முகாம்கள் ஏற்படுத்தின என்று சான் எஜிதியோ கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புத் தலைவர் மார்க்கோ இம்ப்பாலியாட்சோ கூறினார்.

போலந்தின் கிராக்கோவில் நடைபெற்ற சர்வதேச அமைதி கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், அக்கருத்தரங்கின் இறுதியில் ஆஷ்விஷ் நாத்சி வதைப்போர் முகாமைப் பார்வையிட்டது பற்றிக் கருத்துத் தெரிவித்த இம்ப்பாலியாட்சோ இவ்வாறு வத்திக்கான் வானொலியில் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போர் தொடங்கியதன் 70ம் ஆண்டை முன்னிட்டு, “கிராக்கோவில் அசிசியின் உணர்வு” என்ற தலைப்பில் நடைபெற்ற மூன்று நாள் சர்வதேச அமைதி கருத்தரங்கில் கலந்து கொண்ட பலமதப் பிரதிநிதிகள் உலகில் அமைதி நிலவ அழைப்பு விடுத்தனர் என்றும் அவர் கூறினார்.

பலமதத்தவர் பங்கு கொள்ளும் இந்த சர்வதேச அமைதி கருத்தரங்கு அடுத்த ஆண்டு பார்செலோனாவில் நடைபெறும் என்று இக்கருத்தரங்கின் இறுதியில் அறிவிக்கப்பட்டது.

 








All the contents on this site are copyrighted ©.